ராஜினாமா செய்யவே வரமாட்டார்கள், தற்கொலை செய்ய வருவார்களா... தமிழிசை கிண்டல்!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிகள் கூண்டோடு தற்கொலை செய்வார்கள் என்று நவநீதிகிருஷ்ணன் எம்பி கூறியதை தமிழிசை சவுந்தரராஜன் கேலி செய்துள்ளார்.
Recommended Video

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்பிகள் கூண்டோடு தற்கொலை செய்வோம் என்று நவநீதிகிருஷ்ணன் எம்பி கூறியதை தமிழிசை சவுந்தரராஜன் கேலி செய்துள்ளார். ராஜினாமா செய்யச் சொன்னாலே அதிமுக எம்பிகள் வரமாட்டார்கள், தற்கொலை செய்யவா வரப்போகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் நாளைக்குள் அமைக்கப்படுமா என்ற பரபரப்புகள் ஒருபுறமிருக்க, ராஜ்யசபாவில் அதிமுக எம்பி பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புப் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்கள் சொல்வது போல அதிமுக எம்பிகள் ராஜினாமா செய்யப்போவதில்லை, தற்கொலை செய்வோம் என்று ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியேயும், தமிழக மக்களுக்காக பயன்படாத உயிர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்று தொடர்ந்து உணர்ச்சிப்பூர்வமாக பேசி வருகிறார். நவநீதகிருஷ்ணனின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொன்னாலே ஒருவர் கூட வரமாட்டார்கள், தற்கொலை செய்து கொள்ள அதிமுக எம்பிகள் வருவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உணர்ச்சிபூர்வமாக பேசாமல், ஆக்கபூர்வமாக சிந்திக்க வேண்டும். தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வரும் முனைப்பில் பாஜக உள்ளது. முற்போக்குத்தனமான திட்டங்கள் இல்லாததால் தான் தமிழக விவசாயிகளுக்கு பிரச்னை என்றும் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications