வாக்காளர்களுக்கு லஞ்சம்: டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய தமிழிசை வலியுறுத்தல்!
ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த அதிமுக(அம்மா) அணியின் வேட்பாளர் டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மூலமாக ரூ89 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கின. வருமான வரித்துறை அதிகாரிகளின் அதிரடி சோதனையில் இந்த ஆவணங்கள் சிக்கின.

இது தொடர்பான விரிவான அறிக்கையுடன் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டெல்லியில் முகாமிட்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆவணத்தின் அடிப்படையில் ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் அல்லது டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications