பிளஸ் 2 ரிசல்ட் 2017: அரசுப் பள்ளிகள் அபாரம்.. சென்டம் அடித்து 292 பள்ளிகள் அசத்தல்!

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் 292 பள்ளிகள் முழுத்தேர்ச்சி அடைந்த பள்ளிகள் என்ற பெருமையைப் பெற்று அசத்தல் சாதனை படைத்துள்ளன.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்தில் உள்ள மொத்த அரசுப்பள்ளிகளில் 292 பள்ளிகள் முழுத்தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்று, ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்குகள் முறை இருக்காது என தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.
இதனால் தேர்வு முடிவுகள் பற்றிய பயம் இல்லாமல் மாணவ மாணவிகள் தமிழகம் முழுக்க மகிழ்ச்சியாக ரிசல்ட்டை எதிர்கொண்டனர்.

மாணவிகளே அதிகம்

மாணவிகளே அதிகம்

தமிழகத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 92.1% என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு
தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.

0.7 சதவீதம் அதிகரிப்பு

0.7 சதவீதம் அதிகரிப்பு

கடந்த ஆண்டைவிட பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 0.7 அதிகம் ஆகும். மாணவர்கள் 89.3% தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

அசத்திய அரசுப்பள்ளிகள்

அசத்திய அரசுப்பள்ளிகள்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 2851 அரசு மேல்நிலை பள்ளிகளில், 292 அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் வகையில் 100% தேர்ச்சியடைந்து அசத்தல் சாதனைப் படைத்துள்ளன.

விருதுநகர் அரசுப் பள்ளிகள்

விருதுநகர் அரசுப் பள்ளிகள்

அதிலும் விருதுநகர் மாவட்ட அரசுப்பள்ளிகள் முதலிடத்தில் உள்ளன. அடுத்த இடத்தை சென்னையில் உள்ள அரசுப்பள்ளிகள் பெற்று சாதனைப் படைத்துள்ளன. இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்கள் தெரிவிக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+