காவிரி பந்த்: தமிழக எல்லைகளில் போக்குவரத்து நிறுத்தம்: பயணிகள் அவதி
Recommended Video

சென்னை: தமிழகத்தில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் தமிழக எல்லையில் மற்ற மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திமுக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

வேன்கள் ஓடாது
ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள், பேருந்துகள் ஓடாது என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வணிகர் அமைப்புகள், திரைப்பட சங்கங்கள் ஆகியவையும் முழு அடைப்புக்கு ஆதரவளித்துள்ளன. திமுகவின் பந்த் போராட்டத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடையடைப்பு
தமிழகத்தில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள் காலை 6 மணி முதலே கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவான பந்த் என்பதால் பொதுமக்களும் முகம் சுளிக்காமல் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எல்லையில் நிறுத்தம்
தமிழகம்- கர்நாடகா எல்லையான ஓசூரில் இரு மாநில பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கேரளா பேருந்துகள் தமிழக எல்லை பகுதியான குமுளியில் நிறுத்தப்பட்டுள்ளன. அது போல் குமரி வழியாக கேரளத்திலிருந்து வரும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

வேலைக்கு செல்வோர் அவதி
பள்ளிக்கு பேருந்து மூலம் செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நிறுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வேலைக்கு செல்வோரும் பேருந்துக்காக காத்திருந்து காத்திருந்து ஓய்ந்து விட்டனர். தேனி, பெரியகுளம் தென்கரையில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட், கறிகடைகள், பேக்கரி, தேனீர் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைத்து கடைகள் முழுவதும் அடைக்கபட்டுள்ளன.

பேருந்துகள் குறைவு
பேருந்துகள் குறைவாகவே இயக்கப்பட்டு வருவதால் ரயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ரயில்களில் கூட்ட நெரிசலில் பணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications