பட்ஜெட்தான் ஒரே வழி.. திமுகவிற்கு 3வது ஷாக் கொடுக்க அதிமுக ரெடி.. சட்டசபை தேர்தலுக்கு செம பிளான்!
தமிழக பட்ஜெட் 2021 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
Recommended Video
சென்னை: தமிழக பட்ஜெட் 2021 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இன்று தமிழக பட்ஜெட்டில் மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
தமிழக அரசின் பட்ஜெட் 2020-2021 இன்று காலை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது.இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மத்திய அரசின் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி தொடர்பான முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது

என்ன பட்ஜெட்
தமிழக பட்ஜெட் 2021 சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழக அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் இதுதான். அடுத்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு முழு பட்ஜெட் தாக்கல் செய்யாது. இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும். இதனால் இந்த பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. முக்கியமாக தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட் இருக்கும் என்கிறார்கள்.

அதிமுக திட்டம்
இந்த பட்ஜெட்டில் அதிமுக முக்கியமான அறிவிப்புகளை வெளியிடும் என்று கூறுகிறார்கள். தமிழக அரசு கடந்த
ஒரே வாரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டது. முக்கியமாக 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் அதிரடியாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதல்வர் அன்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார். இதற்கான சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

செம அறிவிப்பு
அதிமுக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை ஆடிப்போக வைத்துள்ளது. பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்கிறார்கள். இன்று பட்ஜெட்டிலும் இதேபோல அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். முதல்வரின் மேற்கண்ட இரண்டு அறிவிப்பும் பெரிய வரவேற்பை பெற்றது. டெல்டா பகுதியில் முதல்வரின் அறிவிப்பிற்கு பெரிய அளவில் ஆதரவு இருக்கிறது.

பெரிய ஆதரவு
இந்த அறிவிப்பு காரணமாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளது . அதிமுகவின் பல நற்பெயரை இது கொஞ்சம் மீட்டு கொடுத்துள்ளது. பட்ஜெட் மூலம் மீண்டும் இதேபோல் அதிரடியை நிகழ்த்த அதிமுக அரசு முடிவு செய்துள்ளது என்கிறார்கள். 2021ல் சட்டசபை தேர்தலை திமுக பிரசாந்த் கிஷோர் உதவியுடன் எதிர்கொள்கிறது. திமுகவின் தேர்தல் ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி அதிகம்
பிரசாந்த் கிஷோர் வருகைக்கு பின் திமுகவின் மவுசு கூடி உள்ளது. அதேபோல் திமுகவின் வெற்றி வாய்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அதிமுகவிற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்த பட்ஜெட்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று அதனால் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்பு வெளியாகலாம். திமுகவை தேர்தலின் போது சமாளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம். இந்த பட்ஜெட் நன்றாக இருந்தால் , அதிமுக அடுத்த வருட தொடக்கத்திலேயே தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications