குமரி மாவட்ட சேதம் குறித்து டிச. 11க்குள் அறிக்கை வேண்டும்... அதிகாரிகளுக்கு முதல்வர் ஆர்டர்!
கன்னியாகுமரி மாவட்ட சேதம் குறித்து ஆய்வு செய்து டிசம்பர் 11க்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை : ஓகி புயல் பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட சோம் குறித்து ஆய்வு செய்து டிசம்பர் 11ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஓபி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் உடனடியாக மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்திற்கு பின்னர் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : குமரி மாவட்டத்தில் 29 நிவாரண முகாம்களில் 2391 பேர் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இயல்புவாழ்க்கை திரும்பும் காரணத்தால் 9 முகாட்களில் 891 பேர் மட்டும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன 294 மீனவர்களின் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம், இலங்கைக் கடற்படையின் 15 கப்பல்கள், இந்திய விமானப்படையில் 5 ஹெலிகாப்டர்கள் மற்றும கடலோர காவல் படையினருடன் இணைந்து தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர். குமரி மாவட்டத்தில் மீதமிருக்கும் 79 படகுகள் மற்றும் மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
முழுவதும் மற்றும் பகுதியாக சேதமடைந்த அனைத்து குடிசை வீடுகளுக்கும் உடனடியைக நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புயலால் முறிந்த மரங்களை அகற்ற கூடுதலாக பணியாளர்களை பணியமர்த்திக் கொள்ளலாம்.
குமரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட ஊரக வளர்ச்சி, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, வேளாண்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயலாளர்கள் குமரி மாவட்ட செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலில் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடும் பணியை முடித்து டிசம்பர் 11க்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications