உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு... தமிழக அரசு அறிவிப்பு!
ஓகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : ஓகி புயலால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழித்துறை ரயில்நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இழப்பீடு தொகைகளை அறிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு தொகை ரூ.2 லட்சம் உட்பட தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காயமடைந்த மீனவர்களுக்கு மாற்று தொழில் செய்ய ரூ.5 லட்சம் உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மீனவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
குஜராத், மகாராஷ்டிரா, லட்சத்தீவில் இருந்து மீனவர்களை மீட்க ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்படும். கர்நாடகா, கேரளாவில் இருந்து மீனவர்களை மீட்க 750 லிட்டர் டீசல் வழங்கப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மீனவர்களின் குடும்பத்திற்கும் வாழ்வாதார உதவியாக தலா ரூ. 2,500 வழங்கப்படும் என்றும் காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ. 5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications