அப்துல் கலாம் இறுதிச்சடங்கு: தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு
சென்னை: மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மறைவையொட்டி தமிழகத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் நாளை(வியாழன்)பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள டாக்டர் கலாம் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதால், வியாழக்கிழமை அன்று (30.07.2015) தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அரசு, தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் ரோசய்யா பிறப்பித்துள்ளார்.

இதனிடையே தொழிலாளர் நல ஆணையம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
" முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் மறைவையொட்டி அன்னாரது இறுதிச்சடங்கு நாளை (ஜூலை 30ஆம் தேதி) ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு தமிழக அரசு அன்றைய தினத்தை (30ஆம் தேதி) பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் முன்னாள் குடியரசு தலைவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக Negotiable Instruments Act 1881-ன் கீழ் அனைத்து தொழில் நிறுவனங்களும் ஒரு நாள் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications