அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மாநிலங்கள் உரிமையை பறிக்கிறது.. மோடிக்கு முதல்வர் கடிதம்
சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அணைகள் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே மசோதாவை சட்டமாக்க வேண்டும் என்றும், மாநில உரிமையை பறிக்கும் வகையில் அணைகள் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்திவைக்க பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவிடுத்துள்ளார்.
இந்த மசோதாவின் படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் ஒரே மாதிரியான அணைப் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை அமைக்கவும் முடியும். இந்த பாதுகாப்பு ஆணையம் நாட்டில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும்.
நதிநீர் பங்கீடு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே பிரச்சனைகள் இருந்து வரும் நிலையில், மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதற்கு கர்நாடக அரசும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications