மாட்டிறைச்சி தடை சட்டத்தை தமிழக அரசு ஏற்காமல் இருக்க வேண்டுமா? அமைச்சர் போட்ட அதிர்ச்சி நிபந்தனை
சென்னை: மாட்டிறைச்சி தடை சட்டத்தை தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்த்தால் தமிழக அரசு ஏற்காது என செய்தி-விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடை செய்து மத்திய அரசு தனது விதிமுறைகளை மாற்றியுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.
பல மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதுகுறித்து கேட்டபோது, சட்டத்தை ஆய்வு செய்து பதிலளிப்பதாக காலம் கடத்தும் நோக்கத்தில் பதிலளித்தார்.

கடம்பூர் ராஜு பதில்
மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப பதில் சொல்லலாம் என தமிழக அரசு காத்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறிய பதிலும் அப்படித்தான் உள்ளது.

தொடர்ந்து எதிர்த்தால் மட்டுமே
காஞ்சிபுரத்தில் நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது, கடம்பூர் ராஜு கூறுகையில், மாட்டிறைச்சி தடை சட்டத்தை மக்கள் தொடர்ந்து எதிர்த்தால் தமிழக அரசு அதை ஏற்காது என தெரிவித்தார். அதிமுகவுக்கோ, அரசுக்கோ இந்த விஷயத்தில் எந்த ஒரு கொள்கையும் இல்லை என்பதை அமைச்சர் பதில் பிரதிபலிக்கிறது. மக்கள் எந்த பக்கம் அதிக ஆதரவை தெரிவிக்கிறார்களோ அந்த பக்கம் செல்வது என்பதே அரசின் நிலைப்பாடு என்பது அம்பலமாகியுள்ளது.

மக்கள் மோத வேண்டுமா
சென்னை ஐஐடியில் நடந்ததை போல மாட்டிறைச்சி ஆதரவு மற்றும் எதிர்ப்பு மக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு பலமான தரப்பு எது என்பதை நிரூபித்த பிறகு அரசு முடிவெடுக்கும் என்பதே கடம்பூர் ராஜு பதிலில் இருந்து தெரியவருகிறது. அதேநேரம் ஒருபக்கம் தடைக்கு எதிராக போராடுபவர்களை கடுமையாக தாக்கும்போக்கையும் காவல்துறை கடைபிடித்து வருகிறது.

ஸ்டாலின் புரிந்துகொள்ளவில்லை
நிருபர்களின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜு, மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதை ஸ்டாலின் புரிந்துகொள்ளவில்லை. எனவேதான் பாஜக பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டுகிறார் என்றார் கடம்பூர் ராஜு.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications