உலகின் தலைசிறந்த நாடாக இந்தியாவை மாற்ற உறுதியேற்போம்.. ஆளுநர் வித்யாசாகர் ராவ் சுதந்திர தின வாழ்த்து
நாட்டின் 71வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
நாட்டில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் விட்ட வீரமிக்க சுதந்திர போராட்ட வீரர்களை இந்த நாளில் நினைவு கூருவோம்.

நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகளுக்கு நமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம். தேசபக்தியை ஊக்குவிப்பதோடு நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயர்த்துவோம் என்று அனைவரும் உறுதிஏற்போம். நாட்டின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு உலகின் தலைசிறந்த நாடாக மாற்றுவோம் என்று உறுதியேற்போம்.
இதே போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : இந்திய விடுதலைக்காக போராடிய வீரர், வீராங்கணைகளை நினைவு கூரும் நன்னாள் இது.
இந்திய நாட்டின் தனிச்சிறப்பான வேற்றுமையில் ஒற்றுமை காணும் உணர்வினை காத்து, சாதி, மத வேறுபாடுகளை களைய வேண்டும். நாட்டினை வளமையும் வலிமையும் மிக்கதாக உருவாக்கிட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications