சென்னையில் "இந்த" தேதியில் நல்ல மழை பெய்யும்- தமிழ்நாடு வெதர்மேன்
Recommended Video

சென்னை: சென்னையில் வரும் 8-ஆம் தேதி நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் 8-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையங்கள் கூறியுள்ளன. நாளை கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யுமாம். இந்நிலையில் இந்த மழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
[ நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை.. பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்க தமிழக அரசு உத்தரவு! ]

காற்றை வலுப்படுத்தும்
அவரது பதிவில் கூறுகையில், சென்னையில் இரவு அல்லது பகல் நேரங்களில் நல்ல மழை பெய்யும். அதுபோல் புறநகர் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும். சென்னையில் தற்போது இதுதான் நடக்கும். அரபிக் கடலில் உருவாகவுள்ள புயல் கிழக்கு பகுதியில் உள்ள காற்றை வலுப்படுத்தும்.

8-ஆம் தேதி நல்ல மழை
தமிழகத்தில் குன்னூர், கேட்டி, பாபநாசம், கன்னியாகுமரி, பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்யும். நாளை கொடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட்டுக்காக தமிழகம் மற்றும் கேரளத்தை சேர்ந்த மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். சென்னையில் வரும் 8-ஆம் தேதி காலை நல்ல மழை பெய்யும்.

கனமழை எச்சரிக்கை
சென்னையில் நள்ளிரவு மற்றும் காலை வேளையில் மழை பெய்வது தொடரும். கனமழை குறித்த எச்சரிக்கைக்காக மக்கள் பயப்பட வேண்டாம். எல்லா கனமழை எச்சரிக்கைகளும் வெள்ளத்தை ஏற்படுத்தாது.

இந்திய கடலுக்கு பாதிப்பில்லை
நமக்கு நல்ல மழை தேவை. அதை வரவேற்க வேண்டும். கண்டு அஞ்சக்கூடாது. அரபிக் கடலில் உருவாகவுள்ள புயலானது ஓமனை நோக்கி நகரும். இதனால் இந்திய கடலுக்கு நேரடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. நமது கடற்கரைக்கு மிக மிக தூரத்திலேயே புயல் உருவாகிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications