கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராத இன்ஸ்பெக்டர்.. பிடிவாரண்ட்
தஞ்சாவூர்: தஞ்சை அருகே கொலை வழக்கில் சாட்சி சொல்ல வராததால், போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் நடுக்காவேரி அருகே உள்ளது வரகூர். இந்த ஊரைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் கடந்த 9ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு விசாரணை தஞ்சை மாவட்ட 1-வது கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இது தொடர்பாக சாட்சி கூற வருமாறு நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் அப்போது இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பழனிமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய புவனேஸ்வரி, போலீஸ்காரராக பணியாற்றிய ராமநாதன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து தற்போது திருச்சி மாவட்டம் வையம்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். புவனேஸ்வரி தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராகவும், போலீஸ்காரர் ராமநாதன் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதனால், குறிப்பிட்ட தேதியில் அவர்கள் சாட்சி கூற வரவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி கார்த்திக்கேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சி கூற வராத காரணத்திற்காக பழனிமுத்து, புவனேஸ்வரி, ராமநாதன் ஆகிய 3 பேருக்கும் ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப் பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications