தஞ்சையில் விவசாயிகள் 6-வது நாளாக தொடர் போராட்டம்! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தல்!
தஞ்சையில் விவசாயிகள் 6வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து தஞ்சை விவசாயிகள் போர
தஞ்சாவூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் 6வது நாளாக நடைபெற்று வருகிறது.
காவிரி தீர்ப்பாயத்தை ரத்து செய்வதை கைவிட வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய், எரிவாயு எடுக்கக்கூடாது. காவிரி சமவெளியை பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காவிரி உரிமை மீட்புக் குழுவினர் தொடர் முற்றுகைப் போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த.மணிமொழியன், தமிழ்த் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.நல்லதுரை, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகி பாரதிசெல்வன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகிலேயே தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் பந்தல் அமைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வேப்பிலை கட்டி..
விவசாயிகள் கழுத்திலும், இடுப்பிலும் வேப்பிலையை கட்டி கொண்டும் வாயில் கூழாங்கற்களை வைத்துக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் படும் துயரை பிரதமருக்கு தெரிவிக்கும் வகையில் வாயில் கூழாங்கற்களை வைத்து போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.

சேறு பூசி
டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் போன்று, தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழுவினரும் நூதன போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் நேற்று உடலில் சேற்றைப் பூசியபடி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6வது நாள்
விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழக அரசும் இதுவரை எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. எனவே, விவசாயிகள் தொடர்ந்து போராட முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் 6வது நாளாக இன்றும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

பெண்கள் பங்கேற்பு
விவசாயிகள் நடத்தும் இந்தத் தொடர் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இரவும் பகலும் போராட்டக் களத்திலேயே தங்கி இருக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று மாணவர்கள், இளைஞர்களும் பெரும் திரளாக போராட்டத்தில் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications