திருவள்ளூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.. 10,000 லிட்டர் பெட்ரோல் வீண்!
டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
திருவள்ளூர்: பெட்ரோலை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் 10 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் வீணானது.
துறைமுகத்திலிருந்து டேங்கர் லாரி ஒன்று 12 ஆயிரம் லிட்டர் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு கோடம்பாக்கம் பெட்ரோல் பங்கிற்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது டேங்கர் லாரியானது அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அந்நேரத்தில் முன்னே சென்ற மற்றொரு லாரியை, டேங்கர் லாரி முந்த முயன்றது. இதில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி மேம்பாலப் பகுதியில் கவிழ்ந்தது. லாரி குப்புற விழுந்ததால் அதன் டிரைவர் படுகாயமடைந்தார். உயிருக்கு போராடிய அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
லாரி தலைகீழாக கவிழ்ந்ததில், லாரியினுள் இருந்த பெட்ரோல் சாலையில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. திடீரென பெட்ரோல் சாலைகளில் ஓடுவதைகண்ட பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடினர். சாலைகளில் ஓடிய பெட்ரோல் 10 ஆயிரம் லிட்டருக்கும் மேல் என கூறப்படுகிறது.
உடனடியாக இதுகுறித்து பொன்னேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை ஓடிக் கொண்டிருக்கும் பெட்ரோல் மீது பீச்சி அடித்தனர். கிரேன்கள் வரவழைக்கப்பட்டு குப்புற விழுந்த லாரியை மீட்டகும் பணி நடைபெற்றது. இதனால் சில மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து மீஞ்சூர் போலுசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications