ஹாட் சீசன்… டாஸ்மாக்கில் கூல் பீர் விற்பனை அமோகம்

தமிழகத்தில் மொத்தம் 6,823 டாஸ்மாக் கடைகளும், 4,631 பார்களும் உள்ளன. இதன் மூலம் உள்ளூர் தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களும், பீர்களும் விற்கப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் சராசரியாக ரூ.60 கோடிவரை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வருவாய் கிடைத்து வருகிறது.
பீர் விற்று சாதனை
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த ஏப்ரல் 12ம் தேதி, அதிகபட்சமாக 140 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில்கள் விற்று டாஸ்மாக் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
கூல் கூல் பீர்
கோடையில் மது பிரியர்கள் ஜில் என்று பீர் சாப்பிடுவதை விரும்புவார்கள். இதனால், டாஸ்மாக் கடைகளில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதத்தை விட ஏப்ரலில் அதிக அளவில் பீர் விற்பனையாகும்.
தேர்தல் பிரசார அனல்
கோடை மற்றும் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மதுபான விற்பனையும் சூடு பிடித்துள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.60 கோடி என்று இருந்த வருவாய் ஏப்ரல் மாதத்தில் ரூ.70 கோடியை நெருங்கியுள்ளது.
55 ஆயிரம் பெட்டிகள்
பீர் விற்பனை நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 50 முதல் 55 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டு வந்தது. ஜனவரியில் இந்த அளவு அதிகரிக்கத் தொடங்கியது. பிப்ரவரி மாதம் 70 ஆயிரம் பெட்டிகளை தொட்ட பீர் விற்பனை, மார்ச் மாதம் நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் பெட்டிகள் விற்றது.
1,40000 ஆயிரம் பெட்டிகள்
ஏப்ரல் 3ம் தேதி 81 ஆயிரம் பெட்டிகள், 4ம் தேதி 78 ஆயிரம் பெட்டிகள், 5ம் தேதி 92 ஆயிரம் பெட்டிகள், என படிப்படியாக உயர்ந்து 12ம் தேதி அதிகபட்சமாக 1லட்சத்து 40 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டுள்ளது.
என்ன ஒரு சாதனை
ஒரேநாளில் 140 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில்கள் விற்று சாதனை படைத்திருப்பது கடந்த ஏப்ரல் 12ம் தேதிதான் என்று டாஸ்மாக் தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் முறியடிப்பார்கள்?
வரும் ஏப்ரல் 20ம் தேதி இந்த சாதனை முறியடிக்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சும்மாவா சொன்னாங்க... டாஸ்மாக்ல இலக்கு நிர்ணயிக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்னு!
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications