ஜெ. பிரச்சார கூட்டத்தால் நெல்லை டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
நெல்லை: நெல்லையில் முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு வந்திருந்த கட்சியினர் டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்ததால் மது விற்பனை நேற்று மட்டும் இரண்டு மடங்கு அதிகரித்தது.
சட்டசபை தேர்தலில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா நேற்று நெல்லையில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கட்சியினர்
பாளையங்கோட்டையில் உள்ள பெல்பின்ஸ் மைதானத்தில் நடந்த கூட்டத்திற்கு நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கட்சி தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர்.

டாஸ்மாக்
ஜெயலலிதாவின் கூட்டம் முடிந்ததும் தொண்டர்கள் நேராக அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு படை எடுத்தனர். டாஸ்மாக் கடைகளில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதியதால் நேற்று மது விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்தது.

பார்
டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியதால் பார்களில் அமர்ந்து குடிக்க இடம் இல்லை. இதனால் பலர் கடைகளுக்கு முன்பு நின்று மது அருந்தினர். அந்த வழியாக சென்ற பெண்கள், குழந்தைகள் மது அருந்துபவர்களை பார்த்து பயந்து கொண்டே சென்றனர்.

கட்சி கொடி
ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளில் கூட நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு அதிமுக கட்சி கொடி பறந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. கரை வேட்டி கட்டியவர்கள் கூட்டம் கூட்டமாக மது அருந்தியதை காண முடிந்தது. மூக்கு முட்ட குடித்துவிட்டு கட்சியினர் போதையில் வாகனங்களில் ஏறிச் சென்றனர்.

மகிழ்ச்சி
அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தால் டாஸ்மாக் கடைகளில் ரூ.2.5 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 226 டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications