அலைபாய்ந்த கூந்தலுடன் பயணித்த மாணவி.. பாய்ந்து தாலி கட்ட முயன்ற வாலிபர்.. செம தர்ம அடி!
மேலூர்: மதுரையில் ஓடும் பஸ்சில் பள்ளி மாணவிக்கு தாலி கட்ட முயன்ற டாஸ்மாக் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், சேக்கிபட்டியில் இருந்து மேலூருக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது மேலூர் பிள்ளையார் கோயில் ஸ்டாப் அருகே இருக்கையில் இருந்து எழுந்த ஒரு நபர் திடீரென அந்த பஸ்சில் இருந்த பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்ட முயன்றார்.
மாணவி சத்தம் போடவே, சக பயணிகள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மேலூர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் மேலவலவைச் சேர்ந்த கல்லாணை என்றும், டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணிற்கு கூந்தல் நீளமாக இருக்க வேண்டும், நல்ல நிறமாக இருக்க வேண்டும் என தனது நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார். இவர் கூறியபடி எந்த பெண்ணும் அமையாததால் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் எதிர்பார்த்தபடி அந்த மாணவி இருந்தார் என்பதால் அவரை பல நாட்களாக பின் தொடர்ந்த கல்லாணை ஓடும் பஸ்சிலேயே அவருக்கு தாலி கட்ட முயன்றுள்ளார். இதனையடுத்து கல்லாணையை கைது செய்த போலீசார் அவரை மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications