கொல்லப்பட்ட தூத்துக்குடி ஆசிரியையின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடி: ஒருதலைக்காதல் விவகாரத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஆசிரியை பிரான்சினா உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை உள்ள பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தூத்துக்குடியில் ஆசிரியையாக பணி புரிந்து வந்த பிரான்சினாவிற்கு திருமணம் நிச்சயமாகி ஓராண்டு காலம் ஆகிறது. பிரான்சினா திருமணம் செய்து கொள்ளவிருந்த மாப்பிள்ளை கப்பலில் பணி புரிந்து வந்ததால் அவரும் அண்மையில்தான் விடுப்பு எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்துள்ளார். அவர்கள் இருவருக்குமான திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல சர்ச்சுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் பிரான்சினா. கண் மூடி அவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த போது, கீகன் என்பவர் சர்ச்சுக்குள் புகுந்து பிரான்சினாவை வெட்டி கொன்றுள்ளார். அங்கிருந்து தப்பியோடிய கீகனும் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து, வெட்டிக் கொல்லப்பட்ட பிரான்சினாவின் உடலும், தற்கொலை செய்து கொண்ட கீகனின் உடலும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே இன்று பிரான்சினாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரான்சினாவின் சகோதரர் வெளிநாட்டில் இருந்து சனிக்கிழமை வருவதால் அன்று மாலையில் பிரான்சினாவின் உடலை அடக்கம் செய்யவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனை முன்னிட்டு, இரு வீட்டாருக்கும் இடையே மோதல்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க மருத்துவமனை மற்றும் இருவீட்டாரின் வீடுகளைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications