சேலம் மாணவி நிர்வாணம் – அதிமுக நிர்வாகிக்கு ஆதரவாக போலீஸ்: மக்கள் உரிமை இயக்கம் கண்டனம்
சேலம்: பள்ளி மாணவியையும், அவரது தாயாரையும் நிர்வாணப்படுத்தி தாக்கிய அதிமுகவினர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு தெற்கு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் 10ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த பால் கூட்டுறவு சங்க தலைவரும், அதிமுக கிளை செயலாளருமான விஸ்வநாதன் மகன் சந்தோஷ் சாமிநாதன் சேலத்தில் உள்ள மகேந்திரா தனியார் பாலிடெக்னிக்கில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

சந்தோஷ் சுமதியை ஒருதலையாக காதலித்துதுள்ளார். சுமதி பள்ளிக்கு சென்று வரும் போது வழிமறித்து தன்னை காதலிக்குமாறு பல தொந்தரவு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி இரவு சுமதி தனது தாயுடன் வீட்டில் உறங்கி கொண்டு இருந்த போது, சந்தோஷ் வீட்டுக்குள் புகுந்து தன்னை காதலிக்காவிட்டால் கொலை செய்து விடுவேன், தானும் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டி தகராறு செய்து தாக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து சந்தோஷின் தந்தை தமது உறவினர்களுடன் சென்று மாணவியை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக கூறப்பட்டது .இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் மனம் உடைந்த சுமதியும் அவரது தாயார் மகேஸ்வரி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அத்துடன் மாணவியையும், தாயாரையும் தாக்கி நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் விஸ்வநாதனுக்கு போலீசார் சாதகமாக செயல்படுவதாக தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சுமதி குடும்பத்துக்கு அரசுத் தரப்பில் நிவாரண உதவி வழங்கவும் அந்த இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications