தின்பண்ட தீண்டாமை.. கடைக்கு வர கூடாதா? இனி நீங்க ஊருக்கே வர முடியாது.. குற்றவாளிகளுக்கு அதிரடி தடை!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசியில் தீண்டாமையை கடைபிடித்த குற்றவாளிகளை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர்.

சங்கரன்கோவிலில் உள்ள கிராமத்தில் நிலவி வரும் ஜாதி ரீதியிலான பாகுபாடு தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இப்போது தமிழ்நாட்டில் ஜாதி ரீதியாக இப்படி ஒரு கிராமம் இருப்பது மக்கள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சங்கரன்கோவில் அருகே பாஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியர் தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான
வீடியோக்கள் இணையம் முழுக்க பரவி வருகிறது.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

பள்ளி மாணவ, மாணவியர் மிட்டாய் கடை ஒன்றில் தின்பண்டம் வாங்க சென்ற போது இந்த அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளனர். கடைக்காரர் ஆதி திராவிட பள்ளி மாணவ, மாணவியரிடம்.. உங்களுக்கு தின்பண்டம் கொடுக்க முடியாது. உங்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என்று கட்டுப்பாடு போட்டுள்ளனர். ஊர் கட்டுப்பாடு படி, உங்களுக்கு எதுவும் தர முடியாது. எதிரே இருக்கும் கடையிலும் சொல்லி இருக்கிறேன். அவரும் உங்களுக்கு கொடுக்க மாட்டார். நீங்கள் போய் உங்கள் வீட்டிலும் சொல்லுங்கள் கொடுக்க மாட்டோம் என்று கூறியது சர்ச்சையாகி உள்ளது.

கைது

கைது

வீடியோ சர்ச்சையான நிலையில், உடனே அங்கு போலீசார் சென்று சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்தனர். முருகன், குமார், சுதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஏராளமான போலீசார் அதேபோல் கடையை நடத்தி வந்த மகேஸ்வரனை கைது செய்தனர். மேலும் 20 வயதுடைய ராமச்சந்திரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இவர்தான் அங்கே இந்த கட்டுப்பாட்டை விதிக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

தடை

தடை

இந்த நிலையில்தான் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த கடைக்காரர், அவருக்கு உத்தரவு பிறப்பித்த நபர், மேலும் 2 பேர் அந்த ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஜாதி மோதலை தூண்டுவிட்டுள்ளனர். அவர்கள் ஊருக்குள் நுழைந்தால் சட்ட ஒழுங்கு கெடும் என்பதால், மொத்தமாக அவர்களை ஊருக்குள் அனுமதிக்க கூடா என்று தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை

விசாரணை

இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அங்கு பள்ளியிலும் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் அங்கே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அமைச்சர் அன்பில் மகேஷின் உத்தரவின் பெயரில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் இங்கே உடனே ஆய்வு செய்தனர். மாணவர்கள்.. எங்களை தெருவுல நடக்க விடல.. ஸ்கூல்லயும் தனியாக உட்கார வச்சு இருக்காங்க.. ஸ்கூல்ல மத்த சாதி ஆட்கள் எங்களை மோசமா நடத்துறாங்க என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.இது பற்றி விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+