பழனி முருகன் கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!
பழனி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி மலைக் கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் பொது தரிசன வழியிலேயே அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தைப்பூச திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டும். தை மாதத்தில் பவுர்ணமி அன்று வரும் பூச நட்சத்திரத்தைத்தான் தைப்பூசம் என கொண்டாடி வருகிறார்கள்.
இந்த விழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. இன்று திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.

நாளை தைப்பூசத்தையொட்டி திருத்தோரோட்டமும் நடைபெறும். முருகனை தரிசித்து அருள் பெற நாள்தோறும் பக்தர்கள் பழனியில் குவிந்து வருகிறார்கள். அது போல் பழனிக்கு பாதயாத்திரையாகவும் பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினமே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனிமலை அடிவாரத்தில் குவிந்துவிட்டனர். இவர்கள் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மலைக்குச் செல்ல வின்ச், ரோப் கார் உள்ளிட்ட பகுதிகளில் எல்லாம் பக்தர்கள் கூட்டம் இருந்தது.
பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக பக்தர்கள் மேலே மலைக் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து முடித்துவிட்டு மங்கம்மாள் மண்டபம் வழியாக கீழே இறங்கி வரவும் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அடிவாரம், கிரிவல வீதி பகுதிகளில் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை எடுத்து வந்து ஆடிப்பாடி மலைக் கோயில் வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிக அளவிலான பக்தர்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தைப்பூசத்தையொட்டி சாதாரண பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் வகையில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று (பிப் 10), நாளை (பிப் 11), நாளை மறுநாள் (பிப்.12) ஆகிய 3 தேதிகளில் பக்தர்கள் பொது தரிசன பாதை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
சண்முகநதி, ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தரப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச குடிநீரும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக கழிப்பறை வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் தைப்பூச திருவிழாவுக்கு வரும் 4 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications