நாடாளுமன்றத்தில் பேசுகிறோம்.. நீங்கள் கிளம்புங்கள்.. விவசாயிகளை சந்தித்து தம்பிதுரை பேச்சுவார்த்தை
பாதி மீசையை வழித்து தமிழக விவசாயிகள் டெல்லியில் நூதனப் போராட்டத்தை 21வது நாளான இன்று நடத்தி வருகின்றனர். அவர்களை லோக் சபா துணை சபா நாயகர் 3வது முறையாக இன்றும் சந்தித்து பேசினார்.
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள் இன்று பாதி மீசையை வழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்த எம்பி தம்பிதுரை போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக கடந்த சில மாதங்களில் 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர். எனவே, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 21 நாட்களாக பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தம்பிதுரை சந்திப்பு
அவர்களை இன்று லோக் சபா துணை சபா நாயகர் தம்பிதுரை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்றாவது முறையாக விவசாயிகளை சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். இதனை அமைப்பதன் மூலமாகத்தான் விவசாயிகள் ஓரளவிற்கு விவசாயம் செய்ய முடியும். இப்போது காவிரியில் தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை.

குடிக்க நீர் இல்லை
குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, இந்தப் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்கப்பட வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டியது மிக மிக அவசியம். எங்கள் கட்சியின் கோரிக்கையும் இதுதான்.

வங்கிக் கடன்
தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நாட்டு மக்களுக்காக உணவு உற்பத்தி செய்வதற்காகத்தான் விவசாயிகள் கடனை வாங்கியுள்ளனர். பெரும் நிறுவனங்களுக்கு மானியமும், கடன் ரத்தும் செய்யும் போது ஏன் விவசாயிகளுக்கு செய்யக் கூடாது என்றுதான் விவசாயிகள் போராடி வருகின்றனர்.

பொய்த்த விவசாயம்
நம் நாட்டு மக்களை காக்க வேண்டுமானால் விவசாயிகளை காக்க வேண்டும். மழை இல்லாத காரணத்தால் விவசாயம் பாழானது. சிரமங்களுக்கிடையில் உற்பத்தி செய்த பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட..
நாங்கள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். கண்டிப்பாக இனியும் தொடர்ந்து பேசுவோம். எனவே, அச்சமில்லாமல் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தம்பிதுரை கேட்டுக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications