பெண்ணை வெறித்தனமாய் தாக்கிய போலீசை டிஸ்மிஸ் செய்யனும்... தமிழிசை ஆவேசம்
மதுவிற்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழிசை ஆவேசமாக கூறியுள்ளார்.
திருப்பூர்: திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.
இதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித்தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

வலுக்கும் எதிர்ப்பு
மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடரும் போராட்டம்
டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யக் கோரியும் சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.

தமிழிசை ஆதரவு
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், போலீஸ் தடியடியில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல் கூறினார்.

பெண்கள் புரட்சி
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும். மதுக்கடையை எதிர்த்து போராடிய ஈஸ்வரியை கண்மூடித்தனமாக பாண்டியராஜன் தாக்கியுள்ளார்.

பணி நீக்கம் செய்..
ஏடிஎஸ்பியை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் இனி ஒரு டாஸ்மாக் கடையைக் கூட திறக்க பாஜக அனுமதிக்காது என்றும் தமிழிசை உறுதியளித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications