ஆட்சி விரைவில் கவிழும்.. முதல்வர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் பேட்டி!
விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழும், திமுக ஆட்சிக்கு வரும் என்று கட்சராயன் ஏரியை பார்வையிட்ட ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நடக்கும் 'அதிமுக ஆட்சி கவிழும், ஆட்சி மாற்றம் ஏற்படும் ' என்று தெரிவித்தார்.
கட்சராயன் ஏரியை சேலம் மேற்கு மாவட்ட திமுகவினர் தூர்வாரி சீர்படுத்தியுள்ளனர்.ஏரியில் இருந்த முட்புதர்களை அகற்றி திமுகவினர் தூர்வாரியுள்ளனர்.

முன்னதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் உள்ள ஏரியை, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தூர் வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்படி விடலாம் என்று சேலம் அதிமுக சார்பில் எதிர்ப்பு எழுந்தது.
இதை கண்டித்து அப்போது தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பின்னர் கட்சராயன் ஏரியை பார்வையிட சென்ற மு.க.ஸ்டாலின் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, திமுகவினர் சீரமைத்த ஏரியை ஸ்டாலின் பார்க்க அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலினை கட்சராயன் ஏரியை பார்வையிட ஸ்டாலினுக்கு அனுமதி வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து கட்சராயன் ஏரியை மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், " தமிழகத்தில் ஏரி,குளங்களை, தூர்வார திமுகவினருக்கு நான் வேண்டுகோள் விடுத்தேன். பொதுமக்களின் ஒத்துழைப்போடு திமுகவினர் ஏரி,குளங்களை, தமிழகம் முழுக்க தூர் வாரியுள்ளனர்.
அப்படி தூர் வாரப்பட்ட பல குளங்களில் மழைநீர் நிரம்பி வருகிறது. இன்னும் நிறைய ஏரிகளை திமுகவினர் தூர் வருவார்கள். நடக்கும் ஆட்சி கவிழும், திமுக ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்தார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications