தொந்தரவு தராமல் போராடினாலும் எங்களை விட மாட்டீர்களா?.. காவிரியில் விவசாயிகள் ஆவேசம்
யாருக்கும் தொந்தரவு தராமல் போராடினாலும் எங்களை விட மாட்டீர்களா? என காவிரி ஆற்றில் போராடிய விவசாயிகள் கேட்டனர்.
Recommended Video

திருச்சி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சியில் ஆற்று மணலில் புதைந்து போராடியவர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தியபபோது விவசாயிகள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் காவிரியாறு மண்ணில் அய்யாக்கண்ணு தலைமையில் ஏராளமான விவசாயிகள் திருச்சி காவிரியாறு பகுதிக்குள் இறங்கி கொளுத்தும் வெயிலில் தங்கள் உடலை மண்ணில் புதைத்துக் கொண்டனர்.
அவர்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் நாமம் போடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என போராட்டக்களத்தில் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் கொளுத்தும் வெயிலில் ஆற்று மணலில் புதைந்திருந்த விவசாயிகளை வெளியேற்ற அப்புறப்படுத்தினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
"யாருக்கும் தொந்தரவு தராமல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் எங்களை விட மாட்டீர்களா" என விவசாயிகள் காவல்துறையினரை பார்த்து ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர். "வெயில் இவ்வளவு கொளுத்துகிறது. ஆற்று மணலுக்குள் இப்படியே இருந்தால் உங்கள் உயிர்களுக்கு ஆபத்து நேரிடும், தயவுசெய்து போராட்டத்தை கைவிடுங்கள்" என போலீஸார் அறிவுறுத்தினர்.
பின்னர் போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து முழக்கமிட்ட வண்ணம் இருந்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications