உக்கடம் அருகே பஸ் சக்கரத்தில் தலை சிக்கி பெண் பலி.. உறவினர்கள் ஆவேசம்.. சாலை மறியல்
சாலை விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
Recommended Video

கோவை: கோவை உக்கடம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் மீது மோதியதில் அவரது தலை பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உக்கடம் அருகே லாரிபேட்டை என்னுமிடத்தில் பொள்ளாச்சி நோக்கி தனியார் பேருந்து அதிவேகமாக நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் முன்னே இரு சக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இரு சக்கரத்தின் பின்பகுதியில் ஆஜிரா பீவி என்ற சமையல் வேலை செய்யும் பெண் அமர்ந்திருந்தார். வேகமாக வந்த பேருந்து இரு சக்கரவாகனத்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இதில் ஆஜிராபீவி நிலைதடுமாறி கீழே விழுந்ததுடன், பேருந்தின் சக்கரத்தில் அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி மக்கள் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்வரை பெண்ணின் உடலை கொண்டு செல்ல அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்தை அங்கிருந்த அப்புறப்படுத்திய காவல்துறையினர் இது தொடர்பாக விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற நட்ராயன் என்கிற பழனியை பிடித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications