ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் 1720 பேர் மீதான வழக்குகள் ரத்து.. ஹைகோர்ட் மதுரை கிளை அதிரடி
தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது | 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கு ரத்து- வீடியோ
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விதிகளை மீறி கூடியதாக 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்கை ஹைகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த 18ஆம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன், எஸ்பி முரளி ராம்பா ஆகியோரை சந்தித்து மக்கள் தெரிவித்த பிரச்சினைகளை எடுத்துக் கூறினார்.

அப்போது கூட்டத்தில் விதிகளை மீறி 1,720 பேர் கலந்து கொண்டதாக கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் 1,720 பேர் மீது போடப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications