பாம்பு பழி வாங்குமா.. 3 மாதம் காத்திருந்து கடித்த பாம்புக்குப் பலியான பெண்.. திருபுவனை பரபரப்பு!
கற்குவியலிலிருந்த பாம்பு கடித்து இளம்பெண் உயிரிழந்தார்,
Recommended Video

திருபுவனை: பெண் ஒருவரை கடிக்க முயன்று தப்பி ஓடிய பாம்பு, மூன்று மாதங்களுக்கு பின் கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருபுவனை அடுத்துள்ள கிராமம் கொத்தபுரிநத்தம். இங்கு வசித்து வசித்து வருபவர்கள் கிருஷ்ணன்-மனைவி தம்பதி. 3 மாதங்களுக்கு முன்பு இவர்கள் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டனர். அதற்காக லாரியில் கருங்கற்களையும் விலைக்கு வாங்கினர். கருங்கற்களுடன் வந்த லாரியானது வீடு கட்டப்போகும் இடத்தில் வந்து நின்றது. பின்னர் லாரியிலிருந்து கருங்கற்களை கொட்டும் பணி ஆரம்பித்தது. இதனை லாரி அருகே நின்றுகொண்டு மாரியம்மாள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

பாதி கருங்கற்கள் லாரியிலும், பாதி கட்டுமான பணி நடக்கும் இடத்தில் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், லாரியிலிருந்த கருங்கற்கள் குவியலிலிருந்து ஒரு விஷப்பாம்பு திடீரென மாரியம்மாளை பார்த்து சீறியது. அலறியடித்து மாரியம்மாள் அங்கிருந்து நகர்ந்து ஓடிவிட்டார். உடனிருந்தவர்கள் அனைவரும் பாம்பை விரட்ட ஆரம்பித்தனர். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும் பாம்பை விரட்ட முடியவில்லை. விரட்டிய பாம்பையும் திடீரென காணவில்லை. எங்கேயோ தப்பி ஓடிவிட்டது என்று நினைத்து விட்டுவிட்டார்கள். இந்த சம்பவத்தை 3 மாதங்களாக மறந்தும் விட்டார்கள்.
இந்நிலையில், நேற்று வீடு கட்டும் வேலை தொடங்கியது. ஏற்கனவே குவித்து வைக்கப்பட்ட கருங்கற்களிலிருந்து ஒவ்வொரு கற்களாக மாரியம்மாள் எடுத்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மாரியம்மாளை பார்த்து சீறிய அதே பாம்பு இப்போது ஒரு கல்லுக்கடியில் இருந்து வெளியேவந்து அவரை கடித்தது. இதனால் வலி பொறுக்க முடியாமல் மாரியம்மாள் அலறினார்.
உடனடியாக திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாரியம்மாள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து திருபுவனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3 மாதங்களுக்கு முன் விரட்டியடிக்கப்பட்ட பாம்பு மீண்டும் மாரியம்மாளை கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications