ஆன்மிக பூமி பலாத்கார பூமியாகிவிட்டது.. காம மிருகங்கள் குழந்தைகளை கூட விடுவதில்லை.. நீதிபதி வேதனை
ஆன்மிக பூமி பலாத்கார பூமியாகிவிட்டது என ஹைகோர்ட் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆன்மிக பூமி பலாத்கார பூமியாகிவிட்டது என ஹைகோர்ட் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரையில் 60 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
ஏற்கனவே இந்த வழக்கில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய உள்துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

நீதிபதி அதிருப்தி
இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரித்தார். அப்போது வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் பதிலளிக்காததற்கு நீதிபதி கிருபாகரன் அதிருப்தி தெரிவித்தார்.

நீதிபதி எச்சரிக்கை
அடுத்த விசாரணையின் போது, இந்த கேள்விகளுக்கு பதிலளிக்காவிட்டால், மத்திய உள்துறை மற்றும் மாநில உள்துறை செயலாளர்களும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை செயலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி வரும் என எச்சரித்தார்.

இந்தியா தரம் தாழ்ந்துவிட்டது
மேலும், சமீப காலமாக அதிகரித்து வரும் பலாத்கார குற்றச் சம்பவங்களை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஆன்மீக பூமி என்று அழைக்கப்பட்ட இந்தியா, தற்போது பலாத்கார பூமி என்ற அளவுக்கு தரம் தாழ்ந்துவிட்டது என வேதனை தெரிவித்தார்.

குழந்தைகளை கூட விடுவதில்லை
இந்த காம மிருகங்கள், குழந்தைகளையும் கூட விட்டு வைக்கவில்லை என்றும், இதற்கு சமூகம் மற்றும் சம்பந்தப்பட்ட மனிதனின் உளவியல் ரீதியான பிரச்சனையுமே காரணம் என்றார்.

ஆகஸ்ட் 1க்கு ஒத்திவைப்பு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிய நீதிபதி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications