வங்கித் தேர்வுக்கு கல்வித் தகுதியுள்ள அனைவரையும் அனுமதிக்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை
சென்னை: எஸ்பிஐ வங்கி தேர்வுக்கு கல்வித் தகுதியுள்ள அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பாரத ஸ்டேட் வங்கியில் 17 ஆயிரத்து 140 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் முதன்மை தேர்வு வரும் மே 11 , 17 தேதிகளில் நடக்கலாம் எனக் கூறப்பட்டது.

இந்த சூழலில், கல்விக்கடன் பெற்று திருப்பி செலுத்தாதவர்கள், இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாது என்றும், அவர்களின் விண்ணப்பம் ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தில் மட்டும் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். கல்விக்கடன் பெற்று படித்தவர்கள் உரிய வேலைவாய்ப்புக்கும், வருமானத்துக்கும், வழியில்லாமல் வேலை தேடி வரும் நிலையில், கடன் தொகை தவணையை நிபந்தனை ஆக்கியிருப்பதை ரிசர்வ் வங்கி தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்வி தகுதியுள்ள அனைவரையும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்வினை எழுத வழி வகை செய்ய வேண்டும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications