வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்களை ஓடி ஓடி குச்சியால் அடித்த டிராபிக் போலீஸ்.. கோவையில் பரபரப்பு

வாகன ஓட்டிகளை டிராபிக் போலீஸ்காரர் குச்சியால் தாக்கினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஓடி ஓடி குச்சியால் அடித்த டிராபிக் போலீஸ்-வீடியோ

    கோவை: வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்றவர்களை தாக்கும் போக்குவரத்து காவலர் குச்சியால் விரட்டி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனால் அவர் குடிபோதையில் இருப்பதாக கூறி பொதுமக்கள் அந்த போக்குவரத்து காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    கோவையை அடுத்த செல்வபுரம் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் ஒருவர் நேற்று அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை திடீரென் குச்சி ஒன்றினை எடுத்து தாக்கி தொடங்கினார். இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை மட்டுமல்லாது நான்கு சக்கர வாகனத்தின் உள்ளே அமர்ந்து செல்பவரையும், தான் வைத்து உள்ள குச்சியால் ஓடி ஓடி அடித்தார்.

    விழித்த பொதுமக்கள்

    விழித்த பொதுமக்கள்

    மேலும் நடந்து செல்லும் பொதுமக்களையும் விரட்டி தாக்கி உள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள், மற்றும் சாலையில் கடந்து செல்பவர்கள் என அனைவருமே அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். அனைவருமே விதிகளுக்குட்பட்டு சரியாகத்தானே சென்று கொண்டிருக்கிறோம், ஏன் இப்படி விரட்டி அடிக்கிறார் என யாருக்கும் எதுவுமே ஒருகணம் புரியவில்லை.

    குடிபோதையில் காவலர்

    குடிபோதையில் காவலர்

    சிறிது நேரத்திற்கு யாருமே அவரிடம் செல்ல முடியவில்லை. அனைவரையுமே அந்த போக்குவரத்து காவலர் ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தார். ஒருவழியாக பொதுமக்கள் அவரிடம் சென்று ஏன் இப்படி அடித்து கொண்டிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேச ஆரம்பித்ததும்தான் புரிந்தது அவர் குடிபோதையில் இருந்தது.

    சமாதான பேச்சுவார்த்தை

    சமாதான பேச்சுவார்த்தை

    இதனால் மேலும் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த மக்கள், போக்குவரத்து காவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பெரும் கூட்டமே கூடிவிட்டது. தகவலறிந்து அங்கு வந்த சில போலீஸார் பொதுமக்களை சமாதானம் செய்தனர். அந்த போக்குவரத்து காவலரையும் கண்டித்து அனுப்பி வைத்தனர்.

    வைரலாகும் காட்சிகள்

    வைரலாகும் காட்சிகள்

    போக்குவரத்து நெரிசலை குறைப்பதாக கூறி பொதுமக்களை தாக்கும் போக்குவரத்து காவலர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர். போக்குவரத்து காவலர் வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்களை குச்சியால் விரட்டி தாக்கும் காட்சிகள் வாட்ஸ் ஆப்பில் தற்போது பரவி வருகிறது. பொறுப்பிலுள்ள போக்குவரத்து காவலர் ஒருவரே இப்படி குடித்துவிட்டு குச்சியை கொண்டு தாக்கி சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+