சாலைகள் இல்லை.. ஆனால் தரமான மருத்துவம் உண்டு - கடைக்கோடி மக்களிடம் போய் சேர்ந்த ஸ்டாலின்
ஊட்டி: ஒரு திட்டம் சிறப்பானதாக மட்டும் இருந்தால் போதாது; அதன் செயல்பாடு சிறப்பாக இருக்கவேண்டும். அதனால் சமூகத்தில் மாபெரும் மாற்றம் நடந்திருக்கவேண்டும்.
அப்படியான திட்டங்கள் மிகக்குறைவு. அப்படிப்பட்ட வெற்றிகரமான திட்டம்தான் தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள 'மக்களைத் தேடி மருத்துவம்'. இந்த ஆட்சியில் எளிய மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்.

ஏனெனில் உடல்நலம் குன்றி தவிக்கின்ற போது உறுதுணையாக ஒருவர் கூடவே இருந்தால் மனதிற்கு ஆறுதலாக இருக்கும். அப்படி மனம் உடைந்து நிற்கும் நோயாளிகளின் கூடவே துணையாக இந்தத் திட்டம் செயலாற்றி வருகிறது. அதற்கான சாட்சிதான் ஊட்டியில் உள்ள இந்த மலைக்கிராமம்.
நகரப் பகுதிகளில் இருப்பவர்கள் எப்படியாவது பொது போக்குவரத்தைப் பிடித்து மருத்துவமனையை அடைந்துவிடுவார்கள். அதில் பெரும்பாலும் பிரச்சினை இருப்பதில்லை. அப்படியல்ல மலைக்கிராம மக்கள்.

அடர்ந்த வனப்பகுதியில் ஒரு பகுதியில் இல்லாமல் சிதறி வாழும் இவர்களுக்கு முறையான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கித் தருவது அரசாங்கத்தின் முன்னே நிற்கும் பெரிய சவால். அந்தச் சாவல் பாதையைக் கடந்து ஒரு சரித்திர மாற்றத்தைச் செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மலைப்பகுதிகளில் உள்ள கரடுமுரடான பாதைகளைக் கடந்து வரமுடியாமல் சிக்கித் தவித்த பழங்குடி மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது ஸ்டாலின் கொண்டுவந்துள்ள இந்தத் திட்டம்.

தேவர்சோலா பேரூராட்சி உதகமண்டலத்திலிருந்து 62 கிமீ தொலைவிலும், கூடலூரிலிருந்து 12 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்த தேவர்சோலா பேரூராட்சி மலைக் கிராமவாசிதான் சுரேஷ். இவர் ஆதிவாசி மக்களின் தலைவராகச் செயலாற்றி வருகிறார்.
அவரிடம் தமிழ்நாடு அரசின் 'மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்' பற்றிப் பேசினோம். "எங்கள் கிராமத்தில் காட்டு நாயகர் மற்றும் குறும்பர்கள் என மொத்தமாக 150 குடும்பத்தினர் வாழ்ந்துவருகிறார்கள். வெள்ளையர்கள் வருவதற்கு முன்பு இருந்தே காலங்காலமாக இங்கு வாழ்ந்து வருகிறோம். இந்தக் கிராமத்தில் சாலைவசதி இல்லாதது பெரிய பிரச்சினை. ஒரு வண்டிக்காரரும் உள்ளே வரமுடியாது. ஏனென்றால் சாலைகள் இல்லை. வனப்பகுதியில் கரடுமுரடாகக் காட்சியளிக்கும் வழியில்தான் வரவேண்டும்.
எங்கள் கிராமம் இந்த வனப்பகுதியில் மூன்று கி.மீட்டர் அளவு சிதறிக்கிடக்கிறது. இந்த மணல் சாலையைக் கடந்துதான் எங்கள் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஒரு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாது. சங்கிலி கேட் வரைதான் வரும். அதற்குமேல் நுழைய முடியாது.

குறிப்பா ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளியே போகவே முடியாது. இவை மழைக்காலம். இந்த மலைக்கிராமத்தில் போக்குவரத்து வசதியே கிடைக்காது.
இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டித்தான் மக்களைத்தேடி மருத்துவக்குழு இந்தக் கிராமத்திற்கு வந்து மருத்துவம் பார்க்கிறார்கள். அதுவும் இரண்டு பெண்கள் வருகிறார்கள்.

பெண்கள் இங்கே தனியாகப் பயணிக்க முடியாது. நாங்களும் விடமாட்டோம். வெள்ளை உடையைக் கண்டால், யானை விடாது. ஆகவே அவர்களுக்குப் பாதுகாப்பு தருவது எங்கள் கடமை.
ஒரு ஆணை துணைக்குக் கொண்டுபோய் செவிலியர்களை விட்டுவிட்டு வருவோம். அவர்கள் வந்த பிறகுதான் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஏனென்றால் பல நேரங்களில் மருத்துவம் பார்க்க, மருந்து வாங்கப் பணம் இருக்காது. இவர்கள் இங்கு வந்து இலவசமாக மருத்துவம் பார்க்கிறார்கள். மருத்து தருகிறார்கள். இந்தத் திட்டத்தைத் தந்த அய்யா ஸ்டாலினுக்கு நன்றி" என்கிறார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சி வட்டாரத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் பணியாற்றி வருகிறார் மோனிஷா. செவிலியராகப் பணி செய்து வரும் அவர், "இந்த மலைக்கிராமத்திற்கு வர பேருந்து வசதி கிடையாது. நடந்தேதான் வரவேண்டும்.
ஏனெனில் இந்த மலைப் பகுதிக்கு முறையான சாலைகள் இல்லை. ஆகவே நடந்தே பயணித்து இங்குள்ள பழங்குடி மக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறோம்.

இங்கே வரிசையாக வீடுகள் இருக்காது. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் பெரிய அளவில் இடைவெளி இருக்கும். காலை 9 மணிக்கே ஊருக்குள் வர வேண்டும். அதே போல் மாலை 3க்குள் வெளியேறிவிட வேண்டும். ஏனென்றால் காட்டு விலங்குகளின் நடமாட்டம் மற்ற நேரங்களில் அதிகமாக இருக்கும். குறிப்பாக யானைகளின் நடமாட்டம் அதிகம். மற்ற நேரங்களில் அதிக ஆபத்துகள் வரலாம். இந்த அச்சத்தைத் தாண்டியே மருத்துவம் செய்கிறோம்.

ஆரம்பத்தில் இந்த மலைக்கிராம மக்களிடம் மருத்துவ பார்க்கச் சிரமமாக இருந்தது. பிபி, சுகர் போன்ற பரிசோதனை செய்ய அனுமதிக்கவே மாட்டார்கள். சுகர் டெஸ்ட் எடுக்க ஊசிக் குத்த விடவே மாட்டார்கள். எவ்வளவோ புரியவைத்து இன்று நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்" என்கிறார்.
இந்த மக்கள், முன்பு எல்லாம் மருத்துவம் பார்க்கவேண்டும் என்றால் கூடலூர் பயணிக்க வேண்டும். இல்லை என்றால் ஸ்ரீமதுரை போகவேண்டும். இப்போது இவர்கள் வீடு வீடாகத் தேடிப் போய் மருத்துவம் பார்க்கிறார்கள். ஆகவே எந்தப் பிரச்சினையும் இல்லை.

இதே பகுதியில் கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வருகிறார் அம்பிகா. அவர் என்ன சொல்கிறார்? "இங்கு 138 குடும்பங்கள் இருக்கின்றன. நாங்கள் வருவதற்கு முன்னால் இந்தக் கிராம மக்கள் சுகர், பிபீக்கு தனியார் மருத்துவமனையை நம்பியே இருந்தார்கள்.
கடந்த இரண்டு வருடமாக நாங்கள் அவர்களின் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கிறோம். மருந்துகளையும் இலவசமாகத் தருகிறோம். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கும் பி.பீ, சுகர் டெஸ்ட் கட்டாயம் எடுக்கிறோம்.
வேறு பிரச்சினைகள் இருந்தால், ஆம்புலன்ஸ் அழைத்து நோயாளியை அழைத்துக் கொண்டுபோய் சிகிச்சை அளித்து வீட்டிற்கே திரும்பக் கொண்டுவந்து சேர்க்கிறோம். ஆகவே மக்கள் எங்களை அதிகம் விரும்புகிறார்கள்." என்கிறார்.

-
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications