'இனி நான் வாழ்றதே வேஸ்ட்'.. விரக்தியில் இளைஞர் தற்கொலை
இளைஞர் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மார்த்தாண்டம்: இளைஞர் ஒருவர் தூக்கு போட்டுதற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நந்தன்கோட்டையை சேர்ந்த அஜய் என்னும் 22 வயது இளைஞர், மீன்மார்க்கெட்டில் லோடு மேனாக வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று சாயங்காலம் அவர் வழக்கம்போல் வேலையில் இருந்தார். அப்போது ஒரு செல்போன் அழைப்பு அவருக்கு வந்தது. அதை எடுத்து பேசினார். போனில் யாரோ பேச பேச அஜய்யின் முகமெல்லாம் அதிர்ச்சி, வேதனை, கலக்கம் என எல்லாம் ஒன்றாக கலந்து வந்தன.

பிறகு போனை கட் செய்துவிட்டார். இதையெல்லாம் கூடஇருந்து பார்த்து கொண்டிருந்தவர்களிடம், அழ ஆரம்பித்துள்ளார். அவர்களும் அஜய் எதற்காக அழுகிறார் என்று தெரியாமலும் புரியாமலும் ஆறுதல் சொன்னார்கள்.
பிறகு அஜய், அவர்களிடம் கடைசியாக, 'இனி நான் வாழ்வதில் பயனே இல்லை' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
மனமொடிந்து நேராக வீட்டுக்கு சென்ற அஜய், தன் அறைக்கு சென்று கதவையும் பூட்டிக் கொண்டார். ஆனால் ரொம்ப நேரமாகியும் அஜய் வெளியே வராததை கண்ட குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அஜய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.
அஜய் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை என்பதால், இதுகுறித்து போலீஸாருக்கு தகவல அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அஜய்-க்கு போன் செய்தவர் யார்? என்ன பேசினார்? என இதுவரை தெரியவில்லை.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications