குளிக்கப் போன இடத்தில் புளிய மரத்தில் கார் மோதி இளைஞர் பலி.. குற்றாலத்தில் பரபரப்பு
கார் புளிய மரத்தின்மீது மோதிய காரணத்தினால் இளைஞர் உயிரிழந்தார்.
குற்றாலம்: நெல்லை மாவட்டம் பழைய குற்றாலத்தில் மரத்தின் மீது கார் மோதி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பலியானார். மேலும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தீவிரமாக பெய்து வருவதை தொடர்ந்து குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாவட்டம்ஸ வெளி மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையை சேர்ந்த அருணாசலம் மகன் சக்தி (31)என்பவர் தனது குடும்பத்துடன் காரில் குற்றாலத்திற்கு வந்துள்ளார். ஐந்தருவி, புலியருவி, மெயின் அருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்து விட்டு பின்பு பழைய குற்றால அருவிக்கு குளிப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது கார் எதிர்பாராதவிதமாக ரோட்டில் இடதுபுறம் இருந்த மரத்தின் மீது மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த கணேசன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த குற்றாலம் காவல்துறையினர் விரைந்து வந்து பலியான சக்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, காயமடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications