ஆறுமுகத்தின் பேச்சை கேட்டு தீப்பொறி பட்டம் கொடுத்த அண்ணா...: கருணாநிதி இரங்கல்
ஆறுமுகத்தின் பேச்சைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் அவருக்கு தீப்பொறி என்ற அடைமொழியைக் கொடுத்தவர் என்று திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார்.
சென்னை: திமுக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆறுமுகத்தின் பேச்சைக் கேட்டு தீப்பொறி என்ற அடைமொழியை அண்ணா வழங்கினார் என்றும் மிசா கைதியாகவும் சிறைவாசகம் அனுபவித்தவர் தீப்பொறி ஆறுமுகம் எனவும் கருணாநிதி கூறினார்.
திமுகவின் நட்சத்திர பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம், 78 நேற்றிரவு உடல்நலக்குறைவினால் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு. கழக முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம் அவர்கள் நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மறைந்து விட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.
தீப்பொறி ஆறுமுகம் தனது பதினைந்தாவது வயதிலேயே தந்தை பெரியார் அவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, பெரியாரால் அப்போதே பாராட்டப் பட்டவர். அவருடைய பேச்சைக் கேட்டு, பேரறிஞர் அண்ணா அவர்கள் தான் அவருக்கு தீப்பொறி என்ற அடைமொழியைக் குறிப்பிட்டு, பின்னர் காலப் போக்கில் தீப்பொறி என்றாலே அவரைக் குறிப்பிடும் அளவிற்கு பெயர் பெற்று விட்டார்.
மிசா கைதியாகவும் தீப்பொறி ஆறுமுகம் சிறைவாசம் அனுபவித்தவர். தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சினைக் கேட்பதற்காகவே தனி கூட்டம் கூடுவதுண்டு. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் செல்கிறார். தீப்பொறி ஆறுமுகத்தின் மறைவு குறித்து பெரிதும் வருந்துவதோடு, அவருடைய குடும்பத் தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
தீப்பொறி ஆறுமுகத்திற்கு இரண்டு மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஆறுமுகம், இளவயதிலேயே தி.மு.க.வில் இணைந்து, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசியவர். குறிப்பாக அ.தி.மு.க.வையும், அக்கட்சியின் நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரை கடுமையான சொற்களால் பேசி புகழ்பெற்றவர் தீப்பொறி ஆறுமுகம். தி.மு.க தலைவருடன் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, 2001ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்து தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சியளித்தார். சில ஆண்டுகாலம் அங்கிருந்த தீப்பொறி ஆறுமுகம், கடந்த 2010ல் மீண்டும் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications