தமிழகத்தில் 30,000 "டுபாக்கூர்" டாக்டர்கள் – விளக்கம் கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்
சென்னை: தமிழகத்தில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் நடமாடுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இதுகுறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில், 30 ஆயிரம் போலி டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை அளித்து வருவதாக வெளியான பத்திரிகை செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையம் இதை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

அதன்படி அந்த போலி டாக்டர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து 2 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர், இந்திய மருத்துவ கவுன்சில் செயலாளர், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நாமக்கல்லில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் பேசுகையில் தமிழ்நாட்டில் 30 ஆயிரம் போலி டாக்டர்கள் நடமாடி வருவதாகவும், குறிப்பாக, தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் கணிசமான போலி டாக்டர்கள் இருப்பதாகவும் கூறியதாக தேசிய மனித உரிமை ஆணையம் சுட்டிக்காட்டி உள்ளது.
அந்த தகவல் உண்மையாக இருந்தால், அது தமிழக மக்களின் மனித உரிமையை மீறிய செயல் என்று நீதிபதி டி.முருகேசன் மேலும் கூறியுள்ளார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications