தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம் வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ள வானிலை மையம் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் மட்டும் நேற்று 264 மிமீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் மழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் சூழ்ந்தது.

மிதமான மழை
இந்நிலையில் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

எச்சரிக்கை
மேலும் அரபிக்கடலில் 40 முதல் 50 கிமீ வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

காயல்பட்டினம்
கடந்த 24 மணிநேரத்தில் அதிகளவாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் மேகமூட்டம்
இதனிடையே சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் அவ்வப்போது குளிர்ச்சியான காற்றும் வீசி வருகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications