மநகூ ஒருங்கிணைப்பாளராக நானே தொடருகிறேன்... எந்த குழப்பமும் இல்லையே... வைகோ திட்டவட்டம்
கடந்த காலங்களில் மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன். இனிவரும் காலங்களிலும் சிறப்பாக செயலாற்றுவேன் என வைகோ கூறியுள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே எந்த குழப்பமும் இல்லை என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின. இதன் ஒருங்கிணைப்பாளராக வைகோ இருந்து வருகிறார். இதனிடையே 3 தொகுதி இடைத்தேர்தலை மநகூ புறக்கணிப்பதாக வைகோ அறிவித்தார். இது வைகோவின் தனிச்சையான முடிவு என செய்திகள் வெளியாகின. இதனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களிடையே சலசலப்பு எழுந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தான் இடைத்தேர்தலை புறக்கணிப்பு முடிவை எடுத்தாக வைகோ தெரிவித்திருந்தார்.

இதனிடையே மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து வைகோ விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர் தேவை இல்லை என இடதுசாரிகள் முன்வைத்த கருத்தை மதிமுகவும், விடுதலைச் சிறுத்தைகளும் ஏற்றுக் கொண்டதாக அச்செய்திகள் தெரிவித்தன.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ கூறியுள்ளதாவது: தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இடையே எந்தக் குழப்பமும் இல்லை. மக்கள் நலக்கூட்டணியினர் தமிழகம், புதுச்சேரியில் தனித்தனியாக செயல்படுகின்றனர்.
புதுச்சேரி நிலைப்பாட்டை தமிழக மக்கள் நலக் கூட்டணியுடன் முடிச்சுப்போட வேண்டாம் எனத் தெரிவித்தார். மேலும், ஒருங்கிணைப்பாளர் விடுவிப்பு பற்றி மநகூ தலைவர்கள் விவாதித்தனர், ஆனால் முடிவு எடுக்கவில்லை. கடந்த காலங்களில் மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளேன். இனிவரும் காலங்களிலும் சிறப்பாக செயலாற்றுவேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார். புதுச்சேரி, நெல்லித்தோப்பு இடைத்தேர்தலை மதிமுக புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications