For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா அறையில் சிசிடிவி இல்லை.. சிகிச்சை போட்டோவை வெளியிட முடியாது: ரிச்சர்ட் பியல்

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை லண்டன் டாக்கடர் ரிச்சர்ட் பியல் தெரிவித்துள்ளார். அப்படியே இருந்தாலும் அவை சுவிட்ச்ஆப் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினம் சந்தேகம் தெரிவித்தனர்.

There was no CCTV cameras in Jayalalithaa's room : London Dr.Richard beale

இந்நிலையில் 60 நாட்களுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியல் இன்று விளக்கமளித்த வருகின்றனர்.

அப்போது செய்தியளார்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தது குறித்த சிசிடிவி கேமரா காட்சிகளை வெளியிடாதது ஏன் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டாக்டர் ரிச்சர்ட் பியல் ஜெயலலிதாவின் அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என கூறினார்.

பொதுவாக நோயாளிகள் அறையில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படாது என்றும் அவர் கூறினார். ஒரு வேளை கேமராக்கள் இருந்தாலும் அவை சுவிட்ச் ஆப் செய்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் ரிச்சர்ட் பியல் தெரிவித்தார்.

மேலும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் காட்சிகளை வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார். அதேபோல் நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் டாக்டர் ரிச்சர்ட் பியல் தெரிவித்தார்.

English summary
London Dr.Richard beale says that There was no CCTV cameras in Jayalalithaa's room. And he said there is no need to publish the photograph of the patient, said Dr. Richard Peale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X