ஏற்காட்டில் எஸ்டேட் அதிபரை கட்டிப் போட்டு நகை, பணம் கொள்ளை.. முகமூடித் திருடர்கள் அட்டகாசம்
சேலம்: ஏற்காட்டில் நேற்று இரவு எஸ்டேட் அதிபர் ஒருவரையும், அவரது மனைவியையும் கட்டிப்போட்டு நகை, பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காடு பகோடா பாயிண்ட் அருகில் கிராஞ்ச் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் மையப்பகுதியில் அதன் உரிமையாளர் அப்துல்காதர், அவரது மனைவி நூர்ஜகான் ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணிக்கு எஸ்டேட் வீட்டிற்குள் 4 முகமூடி ஆசாமிகள் புகுந்தனர்.

அவர்கள் வீட்டில் இருந்த அப்துல்காதர், நூர்ஜகான் ஆகியோரை தாக்கினர். பின்னர் கயிற்றால் இருவரையும் கட்டி போட்டனர். அதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூபாய் 2 லட்சம் பணம், 12 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
எஸ்டேட் தோட்ட வீட்டில் அப்துல்காதர், தனது மனைவி நூர்ஜகானுடன் தனியாக இருந்து வந்ததை கொள்ளையர்கள் நீண்ட நாட்களாக நோட்டமிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், நேற்று இரவு வீட்டிற்குள் புகுந்து கொள்ளை திட்டத்தை நிறைவேற்றி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஏற்காடு போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications