'தலித்' இளைஞர் வாயில் சிறுநீர் கழித்த கொடூரம் - சி.பி.சி.ஐ.டி. விசாரணை தேவை: தொல்.திருமாவளவன்
சென்னை: கிருஷ்ணகிரி அருகே தலித் சமூக இளைஞரைத் தாக்கி அவரது வாயில் சிறுநீரை கழித்து கொடூர சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கருவானூர் கிராமத்தில் ஊர் திருவிழாவின்போது கோயிலுக்குச் சென்றதற்காக அரவிந்தன் என்ற குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஆதிக்க சாதி கும்பல் ஒன்று அடித்துத் துன்புறுத்தியதோடு அடிதாங்க முடியாமல் தண்ணீர் கேட்ட இளைஞரின் வாயில் சிறுநீர் கழித்திருக்கிறார்கள்.

இந்த வழக்கில் உள்ளூர் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதால் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
இந்த சம்பவம் நடந்து மூன்று வாரங்கள் ஆனபோதிலும் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழான இதை விசாரிக்கவேண்டிய ஊத்தங்கரை டி.எஸ்.பி. பாதிக்கப்பட்ட இளைஞரை சந்திக்கக்கூட இல்லை.அதுமட்டுமின்றி, ‘சிறுநீர் கழித்ததாக சொல்லப்படுவது உண்மை இல்லை' என அவர் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார்.
இதிலிருந்தே அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சிக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரியவருகிறது.
தற்போது ஊடகங்ளின்மூலம் இந்த கொடூர சம்பவம் வெளி உலகுக்குத் தெரியவந்த நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர் மீதே பொய்வழக்கு ஒன்றைப் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இந்தச் சூழலில் இந்த வழக்கை உள்ளூர் காவல்துறை விசாரித்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது.
எனவே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
தமிழக காவல்துறை சாதிவெறியர்கள்மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவே இது. வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலமுறை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்தியிருக்கிறோம்.
ஆனாலும் தமிழக அரசு இதில் மெத்தனமாகவே இருக்கிறது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த மனிதத்தன்மையற்ற சம்பவத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனியவேண்டும்.
இதனால் இந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும். இனியும் குற்றவாளிகளைக் காப்பாற்ற முற்படாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications