தேர்தலில் போட்டியில்லை- வைகோ அறிவிப்பால் நேற்று அதிர்ச்சியடைந்த திருமா. இன்று திடீர் வரவேற்பு!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தொகுதியில் போட்டியிடாமல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விலகியதால், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதேநேரம், கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், வைகோவின் முடிவை வரவேற்றுள்ளார்.
கோவில்பட்டி தொகுதிக்குட்பட்ட வடக்கு திட்டங்குளத்தில் உள்ள தேவர் சிலைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவிக்கச் சென்ற வைகோவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள திமுகவினர் வன்முறையில் ஈடுபட முயன்றனர்.
அன்று இரவு ஊரில் உள்ள சமூகத்து தலைவர்கள் வைகோவை சந்தித்துள்ளனர். இரு பிரிவு மக்களுக்குள் கலகம் ஏற்படுத்தும் வேலைகள் நடப்பதாகக் கூறியுள்ளனர். இதைக் கேட்ட வைகோ, ரத்தம் சிந்தி பெறும் வெற்றி எனக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

தூங்காமல்
அன்று இரவு முழுவதும் தூங்காமலேயே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனையில் வைகோ ஈடுபட்டிருந்தாராம். அதிகாலையிலேயே ஒரு முடிவுக்கு வந்தவராய், தனது உறவினர்களிடம், சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் விலகும் முடிவை எடுத்துள்ளதை அறிவித்துள்ளார் வைகோ.

வேட்பாளர் மாற்றம்
மறுநாள் தனக்கு பதிலாக விநாயகா ரமேஷ் என்பவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார் வைகோ. வைகோவின் இந்த முடிவு பற்றி மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களுக்கு முன்கூட்டியே சொல்லவில்லை. ஏதாவது பேசி தனது முடிவை அவர்கள் மாற்றிவிடுவார்கள் என்று அஞ்சியே வைகோ அவ்வாறு அமைதியாக இருந்துள்ளார்.

நல்லகண்ணு முயற்சி
வேட்பாளர் மாறியுள்ளது பற்றிய ஊடக செய்தியை பார்த்த உடனே, வைகோவை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் மக்கள் நல கூட்டணி தலைவர்கள். அப்போதுதான் தன்னுடைய முடிவைப் பற்றி விளக்கியிருக்கிறார். ராஜபாளையத்தில் இருந்த இ.கம்யூ மூத்த தலைவர் நல்லகண்ணுவும் வைகோவை சமாதானப்படுத்த நேரில் வந்தார்.

வன்முறை வேண்டாம்
ஆனால், நல்லகண்ணு கூறியும் கூட வைகோ அதை ஏற்கவில்லை. எனக்கு வாழ்வளித்த மக்களிடையே கலவரம் ஏற்படுவதைக் கண்கொண்டு பார்க்க முடியாது. கலவரத்தின் மூலம் வெற்றி பெற்று ஒன்றும் ஆகப்போவதில்லை என்று வைகோ கூறிவிட்டாராம்.

மறுபரிசீலனை
நேற்று இரவு முழுக்க வைகோவை சமாதானப்படுத்த நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன. இதுகுறித்து இன்று, மா.கம்யூ மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "நேற்று இரவுதான் வைகோவிடம் பேச முடிந்தது. தேவர் சிலைக்கு மாலைப் போடப் போகும்போது திமுக தூண்டுதலால்தான் மோதல் நடந்துள்ளது.
சாதி மோதலை தவிர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வைகோ விலகியுள்ளார். இருப்பினும் அவர் முடிவை மறு பரிசீலனை செய்ய கூறினேன்" என்று கூறியுள்ளார்.

அடுத்தடுத்து
அதேநேரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், "தேவர் சிலைக்கு மாலை போடப் போகும்போது எதிர்ப்பு, மறுநாள் காலையில் கறுப்புக் கொடி காட்டி பிரசாரம் போன்றவை நடந்துள்ளன.

வரவேற்பு
தொடர்ச்சியாக நடக்கும் சம்பவங்கள், திமுகவின் சதிவேலைதான். நான் எல்லா சமூகத்தையும் ஒன்றாகத்தான் பார்க்கிறேன் என்று என்னிடம் கூறினார். அவருடைய முடிவு வரவேற்கத்தகுந்த ஒன்றாகத்தான் கருதுகிறேன்" என்று கூறியுள்ளார். திருமாவளவன் நேற்று வைகோவிடம் தொலைபேசியில் பேசுவதற்கு முன்பாக அளித்த பேட்டிகளில் இம்முடிவு அதிர்ச்சியை அளித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications