ஜெ.வை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவி; காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை ஆர்.கே.நகரில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து கல்வியாளர் வசந்திதேவி போட்டியிடுகிறார். காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தொல். திருமாவளவன் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிட்டபோதெல்லாம், கூடுதலான வாக்குகளை அளித்தது காட்டுமன்னார்கோயில் மக்களாகும். அப்படிப்பட்ட பெருமைமிகு தொகுதியில் 15 வருடங்களுக்கு பிறகு நான் போட்டியிடுகிறேன்.

ஆர்.கே.நகர் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட போவதாக ஊடகங்கள் யூகங்கள் வெளியிட்டன. 234 தொகுதிகளில் அதுவும் ஒரு தொகுதிதான் என்றாலும், முதல்வர் போட்டியிடும் தொகுதி ஆர்.கே.நகர் என்பதால், எங்கள் கூட்டணியில் எந்த கட்சி அவரை எதிர்த்து போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

முதல்வரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அந்த தொகுதியை கேட்கவில்லை. முதல்வரை எதிர்த்து போட்டியிடுவது எங்கள் நோக்கம் இல்லை. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்துதான் எங்கள் நோக்கம்.

ஆர்.கே.நகர் தொகுதியில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கல்வியாளர் வசந்திதேவி போட்டியிட உள்ளார்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications