சிதம்பரத்தில் திருமாவளவனை அசைக்க முடியாது.. விசிகவை நெருங்க முடியாத அதிமுக - பாஜக.. தந்தி டிவி சர்வே
சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தேர்தலில் மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை அதிமுக மற்றும் பாஜக நெருங்க முடியாது என தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள லோக்சபா தேர்தல் தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி சார்பில் இந்த கருத்து கணிப்பு என்பது மார்ச் 20 முதல் ஏப்ரல் 14 வரை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. அதன்படி சிதம்பரம் தொகுதியில் வெல்வது யார்? என்பது பற்றி ரிசல்ட் வெளியாகி உள்ளது.
சிதம்பரம் தொகுதி என்பது மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை இந்த தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாளவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வரும் தேர்தலிலும் அவர் தான் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி உள்ளார்.
இந்த தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து அதிமுகவில் சந்திரகாசன், பாஜக சார்பில் வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, நாம் தமிழர் சார்பில் ஜான்சிராணி ஆகியோர் களமிறங்கி உள்ளனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 41 சதவீதம் 47 சதவீதம்வரை ஓட்டு என்பது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் தொல் திருமாவளவன் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு 30 முதல் 36 சதவீதமும், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி 15 முதல் 21 சதவீதம் , நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி 4 முதல் 7 சதவீதம் வரை பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் 1 முதல் 3 சதவீதம் என பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications