எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திருநாவுக்கரசர்... தப்பில்லை என்கிறார் குஷ்பு
எம்.ஜி.ஆரின் 29வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்துக்கு சென்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் மரியாதை செலுத்தினார்.
சென்னை: காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை நேரு, இந்திரா, காமராஜர், ராஜீவ் என்ற பாரம்பரியத்தையும், தி.மு.க. பெரியார், அண்ணா என்ற பாரம்பரியத்தையும், அ.தி.மு.க.வை பொறுத்தவரை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். என்ற பாரம்பரியத்தையும் கடைபிடித்து வருகின்றன.
மாற்றுக் கட்சி தலைவர்களை மதித்தாலும் அந்த கட்சி தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வழக்கம் இல்லை. காமராஜர் எல்லோராலும் மதிக்கப்படும் தலைவராக இருந்தாலும் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சார்பில் மரியாதை செலுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
அதே போல் எம் ஜிஆரும் எல்லோராலும் மதிக்கப்பட்டாலும் திமுக காங்கிரஸ் போன்ற கட்சிகள் மரியாதை செலுத்துவதில் முக்கியத்துவம் தருவதில்லை.
தமிழக காங்கிரசில் இதுவரை எந்த தலைவரும் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தியது இல்லை. பெரியார் ஆரம்பத்தில் காங்கிரஸ் தலைவராக இருந்ததால் அவருக்கு மட்டும் மரியாதை செலுத்தப்படுகிறது.

திருநாவுக்கரசர் மரியாதை
காங்கிரசின் அந்த கலாச்சாரத்தை தற்போதைய மாநில தலைவர் திருநாவுக்கரசர் மாற்றியிருக்கிறார். இன்று எம்ஜிஆரின் 29வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். காங்கிரஸ் தலைவர் ஒருவர் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு வந்ததை அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். திருநாவுக்கரசருக்கு இது புதிதல்ல. ஏற்கனவே அதிமுகவில் இருந்ததால் எம்ஜிஆரை மறக்காமல் மரியாதை செலுத்தி வருகிறார்.

எம்ஜிஆருக்கு மரியாதை
பாஜகவில் இருந்த போதும் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்த தவறவில்லை. கூட்டணியில் கைகோர்த்தாலும் காங்கிரசும், திராவிட கட்சிகளும் வெவ்வேறு பாரம்பரியத்தில் பயணிப்பவை. இந்த மாதிரி நிகழ்வுகளில் இரு கட்சிகளும் தங்கள் பாரம்பரியத்தை மட்டுமே கடைபிடிக்கும். இந்த நிலையில் திருநாவுக்கரசர் இன்று எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்றாலும் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்லாமல் புறக்கணித்து விட்டனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
இதுபற்றி முன்னாள் காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கருத்து கூறும்போது, எம்ஜிஆர் பெரிய தலைவர்தான். அவருக்கு மரியாதை செலுத்துவதில் தப்பில்லை. திருநாவுக்கரசர் எம்ஜிஆருடன் பணியாற்றியவர். அந்த பாசத்தில் சென்றிருப்பார். ஆனால் இதனால் காங்கிரசுக்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

குஷ்பு கருத்து
எம்ஜிஆர் பெரிய தலைவர். அவருக்கு மரியாதை செலுத்தியதை தவறாக நினைக்க முடியாது. இதில் கட்சிக்கு லாபம் என்ன? நஷ்டம் என்ன? என்று பார்க்க முடியாது. என்று கூறினார் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் குஷ்பு.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications