அதிமுகவின் கோட்டை ஆர்.கே.நகரில் வெற்றிக்கொடி நாட்டிய தினகரன்!
அதிமுக யார் பக்கம் என்று ஆண்டவனே ஆர்.கே நகர் தேர்தல் மூலம் தீர்ப்பு எழுதி உள்ளதாக தொண்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்துவரும் நிலையில் அங்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவது அவரது ஆதரவாளர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அவரது தொகுதியான ஆர்.கே நகருக்கு இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளராக தினகரன் ஆகியோர் போட்டியிட்டனர்.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் நடந்து வருகிறது. இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து இருக்கும் நிலையில், டி.டி.வி தினகரன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
இதனால் அவரது அணி தொண்டர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். மேலும், அதிமுகவை தோற்றுவித்தவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவுநாளில் இந்த வெற்றி டி.டி.வி தினகரனுக்கு கிடைத்திருப்பது குறித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில், இத்தனை நாட்களாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் செய்துவந்த மோசமான அரசியலில் இருந்து தமிழக மக்களுக்கு விடிவு கிடைத்து உள்ளது. எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ஜெயலலிதாவின் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு மக்களின் ஆதரவை பெற்று இருப்பதன் மூலம் தினகரன் தொண்டர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
எம்.ஜி.ஆர் நினைவுநாளில் அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை ஆண்டவனே சூசகமாக சொல்லிவிட்டார். இது ஒரு தொகுதி அல்ல; அதிமுக ஆரம்பிக்கப்பட்ட 1977ல் முதல் வெற்றியை கொடுத்த ஆர்.கே நகரில் இருந்து தினகரன் தனது வெற்றிக்கணக்கை துவக்கி உள்ளார் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications