தமிழ்நாட்டில் இதே போல ஒரு வெற்றியை பாஜக பெறும் - தமிழிசை, எச். ராஜா
எதிர்கட்சிகளே இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் 21 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் இதே போன்றதொரு வெற்றியை பெறத்தான் பாஜகவின் தாமரை யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இனி வரக்கூடிய அனைத்து மாநில தேர்தல்களிலும் இந்த வெற்றியானது நிச்சயம் எதிரொலிக்கும் என்று தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.
பா ஜ க வின் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்ற திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என்று தேசிய செயலாளர் எச். ராஜா பதிவிட்டுள்ளார்.
|
21 மாநிலங்களில் பாஜக ஆட்சி
இனி வரக்கூடிய அனைத்து மாநில தேர்தல்களிலும் இந்த வெற்றியானது நிச்சயம் எதிரொலிக்கும் என்று தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார். 21 மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நடைபெறுகிறது. இது சாதாராண வெற்றியல்ல சாதனை வெற்றி என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.

மகத்தான வெற்றி
எதிர்கட்சி இல்லாத அளவில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது. திரிபுரா, நாகாலாந்து தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக தமிழிசை தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெற்றி
தமிழ்நாட்டில் இதே போன்றதொரு வெற்றியை பெறத்தான் பாஜகவின் தாமரை யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் யாத்திரையின் போதுதான் வெற்றியை கொண்டாடி வருகிறோம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
|
ஊழல் அகம்பாவம்
பா ஜ க வின் வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்ற திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. திரிபுராவில் மொத்தமுள்ள 20 தனித்தொகுதிகளையும் பாஜக கூட்டணி வென்றுள்ளது. காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் தோல்விக்கு காரணம் அவர்களின் ஊழல் மற்றும் அகம்பாவமே. இனி கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஜேஎன்யூ வை மட்டுமே ஆளலாம் என்று கூறியுள்ளார் எச். ராஜா.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications