ஈழத் தமிழர் விவகாரம்- தியாகு உள்ளிட்ட 15 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்
சென்னை: இலங்கையை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு தமது ஆதரவாளர்கள் 15 பேருடன் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று தொடங்கினார்.
ஈழத் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த சிங்கள அரசை, காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும், இந்திய அரசு இலங்கைக்கு போர்க்கப்பல் கொடுக்கும் திட்டத்தையும், கடலுக்கு அடியில் கம்பி வழியாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தையும், கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தியாகு நேற்று மாலை முதல் தமது ஆதரவாளர்களுடன் காலவரையற்ற உண்ணாவிரதப்[ போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்த போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தியாகுவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
முன்னதாக மெரினா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க தியாகு அனுமதி கோரினார். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த போராட்டத்துக்கு தியாகு அனுமதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications