நெல்லையில் இரட்டைக் கொலையால் பதட்டம்: போலீஸ் குவிப்பு
நெல்லை: நெல்லை டவுனில் நேற்று இரவு 2 பேர் வெட்டி கெ்லை செய்யப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை டவுன் பாறையடியை சேர்ந்தவர் சண்முகம். அதே பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இருவரும் கட்டிட தொழிலாளிகள். பாறையடி தெருவில் வசித்து வந்த மாரியப்பன் கடந்த சில மாதங்களாக பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

இந்நிலையில் சண்முகம் மற்றும் மாரியப்பன் ஆகியோர் ராஜ்குமார் என்பவரை அழைத்துக் கொண்டு டவுன் பஜாரில் பொருட்கள் வாங்க நேற்று இரவு சென்றுள்ளனர். வெஸ்டர்ன்ஸ் தண்ணீர் பாக்ஸ் வாங்கி விட்டு ஒரே பைக்கில் 3 பேரும் பாறையடி தெருவுக்கு திரும்பியுள்ளனர்.
டவுன் சாலியர் தெருவில் மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவர்களை வழி மறித்துள்ளனர். அவர்கள் கையில் வைத்திருந்த அரிவாளால் 3 பேரையும் சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதில் ராஜ்குமார் மட்டும் வெட்டப்பட்ட கையோடு தப்பி ஓடினார்.
மற்ற இருவரும் வெட்டு காயங்களோடு பைக்கில் இருந்து சரிந்து விழுந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர்கள் அந்த இடத்திலேயே பலியாகினர். பைக்கில் அரிவாளோடு வந்த 3 பேரும் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்ததும் பாறையடி தெரு மக்கள் சாலியர் தெருவில் குவிந்தனர்.
இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதனால் அந்த தெருவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடைகளும் அடைக்கப்பட்டன. கொலையான சண்முகத்திற்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். மாரியப்பனுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த கொலையால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications